உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாணவியரிடம் சில்மிஷம் மாநகராட்சி ஆசிரியர் கைது

மாணவியரிடம் சில்மிஷம் மாநகராட்சி ஆசிரியர் கைது

திருச்சி:திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். திருச்சி, கே.கே.நகரில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும், நான்கு மாணவியர், சைல்டுலைன் உதவி எண்ணுக்கு அழைத்து, தங்களுக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். சைல்டு லைன் அமைப்பினர் விசாரணையில், ஆங்கில ஆசிரியரான திருச்சி, கருமண்டபத்தை சேர்ந்த டேனியல் சுரேஷ், 46, தொல்லை கொடுத்தது தெரிந்தது. கண்டோன்மெண்ட் மகளிர் போலீசார், டேனியல் சுரேஷை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை