மேலும் செய்திகள்
ஆசிரியையிடம் ரூ.1,500 லஞ்சம் வட்டார கல்வி அலுவலர் கைது
16-Dec-2025 | 1
பெண்ணை கர்ப்பமாக்கி மாயமான வாலிபர் கைது
14-Dec-2025
திருச்சி:திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 65. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலிமனையை, கார்த்திகேயன் என்பவருக்கு விற்க முடிவு செய்து, அதற்காக நேற்று திருவெறும்பூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய திட்டமிட்டனர்.இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் கடந்த, 27ம் தேதி, திருவெறும்பூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சார் - பதிவாளர் சபரிநாதனை அணுகி, பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுஉள்ளார். அதற்கு சபரிநாதன், ஒரு பத்திரப்பதிவுக்கு, 10,000 ரூபாய் வீதம், இரு பத்திரப்பதிவுக்கு, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., மணிகண்டனிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை, 5:00 மணிக்கு பத்திரப்பதிவு முடிந்தவுடன், கோபாலகிருஷ்ணன் லஞ்சப்பணத்தை, அங்கிருந்த புரோக்கர் ஜெயசூர்யா, 24, என்பவர் மூலம் கொடுத்தார்.சார் - பதிவாளர் சபரிநாதன், 41, அதை வாங்கும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
16-Dec-2025 | 1
14-Dec-2025