உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விமானத்தில் கடத்திய பாம்பு பறிமுதல்

விமானத்தில் கடத்திய பாம்பு பறிமுதல்

திருச்சி:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, கொழும்பு வழியாக, நேற்று முன்தினம் இரவு, திருச்சிக்கு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணியரையும், உடமைகளையும் சோதனை செய்த போது, ராமநாதபுரத்தை சேர்ந்த ஆண் பயணி ஒருவர், 25 அரிய வகை பச்சை அடுக்கு பாம்புகள் கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர். பாம்புகளை, வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பாம்புகள் கடத்தி வந்தவரிடம், அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை