மேலும் செய்திகள்
பெண்ணிடம் வழிப்பறி சிறுவன் கைது
10-Oct-2025
திருச்சி: திருச்சியில், 17 வயது மகனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தையை போலீசார் கைது செய்தனர். திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் தங்கரத்தினம் நகரில் வசிப்பவர் முகமது நிஜாம்தீன், 45. இவரது, 17 வயது மகன், நேற்று முன்தினம் இரவு, தன் தந்தையின் 'சுசுகி' பைக்கை ஓட்டி சென்றார். காந்தி மார்க்கெட் ஆர்ச் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த, 17 வயது சிறுவனை நிறுத்தி விசாரித்தபோது, அவரிடம் லைசன்ஸ் இல்லாததும், அவர் மைனர் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரது தந்தை நிஜாம்தீனை வரவழைத்த, காந்தி மார்க்கெட் போலீசார், மைனர் மகனை பைக் ஓட்ட அனுமதித்த குற்றத்துக்காக, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10-Oct-2025