உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அரசு விழாவுக்கு மண் எடுக்கும் ஒப்பந்தம்; இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் குஸ்தி

அரசு விழாவுக்கு மண் எடுக்கும் ஒப்பந்தம்; இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் குஸ்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் வரும் ஜன., 28 முதல் பிப்., 3 வரை பாரத சாரணர் வைரவிழா மற்றும் கருணாநிதி நுாற்றாண்டு விழா நடக்கிறது. இதில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக, சிப்காட்டில் பிரதான சாலைகள் அமைத்தல், ஹெலிபேட் மற்றும் அதற்கான அணுகுசாலைகள் அமைக்க, 6,000 கன மீட்டர் மண் தேவைப்படுகிறது. அந்த மண் எடுத்துக் கொடுக்கும் ஒப்பந்தம் மற்றும் அனுமதியை, அமைச்சர் நேருவின் ஆதரவாளரும், தி.மு.க., மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலருமான ஆரோக்கியம் பெற்றார்.நேற்று முதல், 19ம் தேதி வரை, 2,120 யூனிட் மண் எடுக்க, மணப்பாறை தாசில்தார் அனுமதி கடிதம் வழங்கிய நிலையில், விடத்திலாம்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு கல்லாங்குத்து நிலத்தில் உள்ள கிராவல் மண் எடுக்க லாரிகள் வந்தன.அப்போது அங்கு வந்த அமைச்சர் மகேஷின் ஆதரவாளர்களான மணப்பாறை தி.மு.க., நகர செயலர் செல்வம், திருச்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும், 'மண் எடுக்க எப்படி ஒருவருக்கே ஒப்பந்தம் கொடுக்கலாம்?' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளை திட்டினர். விடத்திலாம்பட்டி மக்களும் மண் எடுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இங்கு மண் எடுக்கப்படாது என்று உறுதி அளித்து, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தனர். அரசு விழாவுக்கு மண் எடுக்க, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஆதரவாளர்கள், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் ஆதரவாளரின் லாரிகளை மறித்து ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகளுக்கு ஆபாச அர்ச்சனை

மணப்பாறை தாசில்தார் செல்வம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மரிய இன்னாசி, மணப்பாறை டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரச்னை நடந்த இடத்திற்கு வந்தனர். அப்போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மரிய இன்னாசியை, 'நீ யார், எந்த ஊர், பெயர் என்ன, தொலைச்சுருவேன், வேட்டியை உருவிருவேன், இருக்க முடியாது' என்று, அமைச்சர் மகேஷின் ஆதரவாளரான ஒன்றிய செயலர் ராமசாமி மிரட்டலாக பேசி, ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதைக்கேட்ட அரசு அதிகாரிகளோ, ஆளுங்கட்சி நிர்வாகிகள் என்பதால், எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல், அமைதியாக நின்றிருந்தது பரிதாபமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
டிச 12, 2024 10:45

இந்த ஆட்சியில் இது போன்ற அவலங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.. வழக்கமாக காவடி எடுத்து பாஜக ஆதரவாளர்களை திட்டித் தீர்க்கும் கோல்மால்புர கூலிப்படையினர் இனிதான் வர வாய்ப்பு .....


Venkateswaran Rajaram
டிச 12, 2024 09:23

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத திருட்டு திராவிட கழக மாடல் ஆட்சி இப்படித்தான் இருக்கும்


அப்பாவி
டிச 12, 2024 07:56

திருட்டு திராவுடனுங்க ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு போராட்டம். கொள்ளை டபுள் ஆயிடும்.


sankaranarayanan
டிச 12, 2024 07:37

அதானே இதுவரை இது போன்ற செயல்கள் வெளி வரவில்லை இனி வ்ருவது சகஜம் உள்குத்து விஷயம் இனி பகிரங்கமாக எல்லா ஊடகங்களிலும் போடவேண்டும் அவனவன் தலை எடுத்தவன் தண்டல்காரன் என்பதுதான் இந்த கட்சியின் நியதி இதை யாராலும் தடுக்கவே முடியாது மாற்றவே முடியாது கட்சி ஆளும் போதே எல்லருடைய பைகளையும் நிரப்பிக்கொள்வதுதான் எங்களது தர்மம் முறை நியதி இது இனி எல்லா இடங்களிலும் தொடரும் தடுக்கவே முடியாது


Kasimani Baskaran
டிச 12, 2024 06:04

அதானே... எல்லா திமுக உட்பிரிவுகளும் வெவ்வேறு நேரங்களில் மண்ணள்ளிக் கொள்ளலாம் என்று புதிதாக ஆணை ஒன்றை கொடுத்தால் சமாளித்து விடலாம்.


Kasimani Baskaran
டிச 12, 2024 06:04

அதானே... எல்லா திமுக உட்பிரிவுகளும் வெவ்வேறு நேரங்களில் மண்ணள்ளிக் கொள்ளலாம் என்று புதிதாக ஆணை ஒன்றை கொடுத்தால் சமாளித்து விடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை