உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி டி.ஐ.ஜி., தொடர்ந்த அவதுாறு வழக்கு சீமான் பிப். 19ல் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

திருச்சி டி.ஐ.ஜி., தொடர்ந்த அவதுாறு வழக்கு சீமான் பிப். 19ல் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

திருச்சி:திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதுாறு வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிப்., 19ல் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து, நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து, அவதுாறு பரப்பி, மார்பிங் செய்த போட்டோக்களையும் பதிவிட்டனர். இதற்கு ஆதரவாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பல இடங்களில், எஸ்.பி., வருண்குமாரை அவதுாறாகவும், மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசினார்.இதுகுறித்து எஸ்.பி., வருண்குமார், திருச்சி 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், சீமானிடம், 2 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அவதுாறு வழக்கு தொடர்ந்தார். நேற்று அந்த வழக்கு மாஜிஸ்திரேட் பாலாஜி முன் விசாரணைக்கு வந்தது.விசாரணை முடிவில், வரும் பிப்., 19ம் தேதி, நீதிமன்ற விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வருண்குமார் தற்போது திருச்சி டி.ஐ.ஜி.,யாக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை