| ADDED : ஜூலை 19, 2011 12:25 AM
திருச்சி: சம்பள உயர்வு, எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் நேற்று காலை முதல் மதியம் வரை நடந்தது. கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தங்களின் பிரச்னைகள் குறித்து மனு அளித்தனர். மாவட்டத்தில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களும் நேற்றைய குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். மனுவில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பணிநேரத்தை எட்டு மணிநேரமாக மாற்றவேண்டும், கூடுதல்வேலைக்கு கூடுதல் சம்பளம், சம்பள உயர்வு, போனஸ், ஓய்வு இடவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.