| ADDED : ஆக 02, 2011 11:59 PM
மாணவர்கள், மக்கள் சாலைமறியல்மணப்பாறை: மணப்பாறை அருகே அரசு
மேல்நிலைப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பள்ளி
மாணவர்களும், பொதுமக்களும் சேர்ந்து நேற்று காலை சாலை மறியலில்
ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அரசு நிலைப்பாளையத்தில் அரசு
மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அரசு நிலைப்பாளையம்,
பூசாரிப்பட்டி, நவகிணத்துப்பட்டி, காட்டையாம்பட்டி, அணியாப்பூர்,
திம்மனூர், பண்ணப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காச்சக்காரன்பட்டி உட்பட 25க்கும்
மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 1,122 மாணவ, மாணவியர்
படிக்கின்றனர்.இப்பள்ளிக்கு மோதிய கட்டிடங்கள் இல்லாததால் கடந்த இரண்டு
ஆண்டுக்கு முன் தற்போதைய பள்ளிக்கட்டிடம் உள்ள பகுதியிலிருந்து இரண்டு
கி.மீ., தொலைவில் அணியாப்பூர் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே கூடுதல்
பள்ளிக்கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணி துவங்கப்பட்டது.'தற்போதுள்ள
பள்ளி அருகிலேயே கூடுதல் கட்டிடம் கட்டவேண்டும்' என பொதுமக்கள் அப்போது
கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அரசியல் காரணங்களால் புதிய இடத்திலேயே
ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டி
முடிக்கப்பட்டது.'புதிய கட்டிடத்தை திறந்து பள்ளியை இங்கு மாற்றவேண்டும்'
என ஒரு தரப்பு மாணவர்கள் 400 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் வகுப்புகளை
புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் பள்ளி புதிய கட்டிடத்திற்கு
இன்று புதன் கிழமை முதல் மாற்றப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து நேற்று காலை
பள்ளியை புதிய கட்டிடத்திற்கு மாற்றக்கூடாது எனக்கூறி அரசு நிலைப்பாளையம்
மூன்று ரோட்டில் மாணவர்கள், பொதுமக்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகன் குமார், மணப்பாறை தாசில்தார்
விஜயலட்சுமி, ஆர்.ஐ., சாவித்திரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினர்.