உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நலத்திட்ட உதவிகள்எஸ்.பி.ஐ., வழங்கல்

நலத்திட்ட உதவிகள்எஸ்.பி.ஐ., வழங்கல்

துறையூர்: துறையூர் அருகே பகளவாடியிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.துறையூர் அருகே பகளவாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் இம்மானுயேல் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி துறையூர் கிளை பகளவாடி சேவை மையத்தின் மூலம் மின் விசிறியும், மாணவ, மாணவிகளுக்கு பிஸ்கட் பாக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வங்கி மேலாளர் ஸ்ரீதர், தனிப்பிரிவு மேலாளர் தனபால், சேவை மைய பொறுப்பாளர் நடராஜன் நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் செல்வம், ஜார்ஜ் வில்லியத்திடம் வழங்கினர். பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜெய்சங்கர், தங்கராசு, பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி