உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறப்பு

முக்கொம்பு அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறப்பு

திருச்சி : அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, நேற்று முன்தினம் அமராவதி அணையில் இருந்து, 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர், ஈரோடு மாவட்டம், பவானி அருகே கூடுதுறையில், காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த தண்ணீர் கரூர் மாவட்டம், மாயனுார் அணையை கடந்து, திருச்சி முக்கொம்பு வந்து கொண்டிருக்கிறது. முக்கொம்பு அணைக்கு வரும் தண்ணீர், மேலணையில் இருந்து திறக்கப்படும் என்று, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்திருந்தார். அதன்படி, முக்கொம்பு மேலணைக்கு, நேற்று 17,000 கன அடி நீர் வரத்தானது. அதில், 10,000 கன அடி நீர் காவிரி ஆற்றிலும் 7,000 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்து அதிகரித்தால், தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை