உள்ளூர் செய்திகள்

நேற்றைய போக்சோ

திருச்சி ஆசிரியருக்கு 'கம்பி'

திருச்சி: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே போதாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் ஜெயராஜ் சூசைநாதன், 58. இவர், அதே பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும், 6 வயது மாணவிக்கு, வகுப்பறையில் வைத்து தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமி தன் தாயிடம் கூற, அவர் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியரை நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

16 வயது மாணவன் கைது

ஆம்பூர்: திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியைச் சேர்ந்த, பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவன், சில நாட்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது. மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஏ.ஹெச்.எம்., சிக்கினார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள், 58, பத்தாம் வகுப்பு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'சைல்டு லைன்' அமைப்புக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட குழந்தைகள் நல மைய அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டி.எஸ்.பி., குமார், அரிமளம் போலீசார், பெருமாள் மற்றும் மாணவியரிடம் தனித்தனியே விசாரித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நல மைய அலுவலர்கள் புகாரின் படி, திருமயம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ உட்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து, பெருமாளை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை