உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / பவுடர் அடிச்சி பளபளன்னு இருக்கீங்களே... 1,000 ரூவா வந்துச்சா: கதிர் ஆனந்த் நக்கல்..

பவுடர் அடிச்சி பளபளன்னு இருக்கீங்களே... 1,000 ரூவா வந்துச்சா: கதிர் ஆனந்த் நக்கல்..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: குடியாத்தத்தில், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், ஓட்டு கேட்டு சென்ற போது, பெண்களை பார்த்து, 'பவுடர் அடித்து பளபளவென இருக்கிறீர்களே... 1,000 ரூபாய் பேசுதா...' என, நக்கலாக பேசியது தொடர்பான வீடியோ பரவி வருகிறது.வேலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, வேலுார் மாவட்டம், குடியாத்தம் காந்தி நகர் மற்றும் கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் திறந்த வேனில் பொதுமக்களிடம் கதிர் ஆனந்த் ஓட்டு கேட்டார். அப்போது கூட்டத்தில் நின்றிருந்த பெண்களை பார்த்து, 'எல்லாம் பேர் அண்டு லவ்லி, பாண்ட்ஸ் பவுடரு, சிங்கார் குங்குமம்... பளபளன்னு இருக்கீங்க.. என்னானு தெரியல... இன்னா காரணம்... ஆயிரம் ரூவா வந்துச்சா... அதான்' என்றார்.இந்த வீடியோ பரவி, பெண்களிடம் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், வேட்பாளர் கதிர் ஆனந்த், தன் 'இன்ஸ்டா'வில் விளக்கம் அளித்துள்ளார். அதில், எடிட் செய்த வீடியோவும், எடிட் செய்யப்படாத வீடியோவும் இடம் பெற்றுள்ளது. அதோடு, 'தோல்வி பயத்தில் வீடியோவை தவறாக சித்தரித்து பரப்பும், மோடி மீடியா' என்று பதிவிட்டுள்ளார்.மேலும், அப்பகுதியில் கதிர் ஆனந்த் ஓட்டு கேட்டு பேசும்போது, ''குடியாத்தம் பகுதியில், ரிங்ரோடு அமைக்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுத்தார். நான் அப்போது, லோக்சபாவிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி இங்கு, 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரிங்ரோடு கொண்டு வந்தேன்,'' என்றார்.இது பற்றி தி.மு.க.,வினர் கூறியதாவது:ஏற்கனவே கதிர் ஆனந்தின் செயல்பாடுகளால் தொகுதியில் அவருக்கு நல்ல பெயர் இல்லை. அவரை ஜெயிக்க வைக்க, அவரது தந்தை துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி வருகிறார். இந்நிலையில், பிரசாரத்தில் பேசிய கதிர் ஆனந்த் நாகரிகமில்லாமல், பெண்களை கிண்டல் செய்துள்ளதை, தி.மு.க.,வினரே ரசிக்கவில்லை.இனியும் கதிர் ஆனந்த், தன் போக்கையும், பேச்சையும் மாற்றிக் கொள்ளாவிட்டால், தி.மு.க.,வினரே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

M Ramachandran
ஏப் 05, 2024 19:50

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு


kumaresan
ஏப் 03, 2024 12:42

இப்படி கேட்டும் தான் இந்த தமிழகப் பெண்கள் இவருக்கு தான் ஒட்டு போடுவார்கள்


Indhuindian
ஏப் 02, 2024 13:23

இவரு எப்பவும் பல்லை காண்பிச்சிகிட்டே இருக்காரே கையிலே கோல்கேட் பற்பசையோடதான் வருவார் போல இருக்கு


Pallava Rajan
ஏப் 02, 2024 12:05

பிச்சைக்காரர்களை தமிழர்கள் இருக்கும் வரை இப்படித்தான் அரசியல் வாதிகளிடம் பேச்சு கேட்கவேண்டும்


angbu ganesh
ஏப் 02, 2024 09:44

இவன் இரட்டை அர்த்ததுல பேசி இருக்கிறான், ஏன் பெண்களின் புருஷனுங்க என்ன வெத்துவெட்டுங்களா அவங்க வாங்கி கொடுக்க மாட்டாங்களா, இவன் கொடுக்கற ஆயிரத்திலேதான் அவங்க இவ்ளோ நாள் மேக்கப் போட்டுக்கரங்களா,


Ramesh Sargam
ஏப் 02, 2024 09:35

இந்த கேள்வியை உன் அம்மா, உன் சகோதரி, உன் மனைவியிடம் கேட்பாயா?


kumaresan
ஏப் 03, 2024 12:48

ஏன்? ஏன்? கோபப்படுகிறீர்கள்? முதலில் உங்கள் வீட்டு பெண்களையும் நீங்களும் இவருக்கும் இவர் கட்சிக்கும் ஒட்டு போடுவதை நிறுத்துங்கள் எல்லாம் தானாக சரியாகிவிடும்


vbs manian
ஏப் 02, 2024 08:28

ஆணாதிக்க திமிறின வெளிப்பாடு இன்னும் கற்காலத்தில் இருக்கின்றனர்


Sri Ram
ஏப் 01, 2024 15:54

மக்களிடம் இலவச பெரூல் கொடுத்து ,சாராய கடையை ஆதிக்கம் திறக்க நினைக்கம் கட்சி DMK


ram
ஏப் 01, 2024 13:28

அடித்தால் கூட இந்த மக்கள் துடைத்துக்கொண்டு திருட்டு திமுகவுக்கு தான் வோட்டு போடுவார்கள் தமிழனுக்கு என்று தனி குணம் உண்டு அது இதுதான் போல


sethu
ஏப் 01, 2024 13:27

எம் ஜி ஆர் போட்ட பிட்ச்சையில் படித்த இவரது அப்பா அந்த எம் ஜி ஆருக்கு துரோகம் செய்து விட்டு திருடனோடு கூட்டு சேர்ந்து பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்தவர் மாதிரியாகவா பேசுகிறார் இவரும் இவரது அப்பாவும்


மேலும் செய்திகள்