உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வெடிகுண்டு தயாரித்தவர் கைது 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்

வெடிகுண்டு தயாரித்தவர் கைது 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்

வேலுார், வேலுார் அருகே வீட்டில் பட்டாசு, நாட்டு வெடிகுண்டு தயாரித்தவரை போலீசார் கைது செய்து, 250 கிலோ வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வல்லாண்டராமம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 38. இவர், கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன், செதுவாலை பகுதியில் பட்டாசு கடை நடத்தி வந்தார். பின்னர் பட்டாசு கடை நடத்துவதை கைவிட்டு வீட்டிலேயே பட்டாசு, பாணம், சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வந்தார். வீட்டிலேயே பட்டாசுகள் தயாரிப்பது குறித்து தகவலறிந்த அணைக்கட்டு தாசில்தார் சுகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் இரவு சதீஷ் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிலேயே தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள், பாணங்கள், பட்டாசுகள் மற்றும், 250 கிலோ வெடி மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீைஷ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை