உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / தி.மு.க., நிர்வாகி பற்றி புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு

தி.மு.க., நிர்வாகி பற்றி புகார் அளித்தவர் மீது வழக்குப்பதிவு

வேலுார்,:மணல் கடத்திய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு பதிந்த போலீசார், மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த மாற்றுத்திறனாளி மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னையில், தமிழக - ஆந்திர எல்லையில் காட்பாடி, தி.மு.க., வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும், கவுன்சிலர் நதியாவின் கணவருமான பவுல், 43, மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த, 20ல் பவுல் மணல் கடத்தலில் ஈடுபட்டபோது, பொன்னை என்.பி.என்.,பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோவிந்தராஜுலு, 50, போலீசில் புகார் செய்தார். ஆத்திரமடைந்த பவுல், அவரது நண்பர்கள் இளையா, எல்வின் ஆகியோர், கோவிந்தராஜுலுவின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி, அவரது மனைவி, தாயை ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்தனர். கோவிந்தராஜுலு, பொன்னை போலீசில் புகார் செய்தார். பவுல், இளையா, எல்வின் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பவுலை மிரட்டியதாக, கோவிந்தராஜுலு மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஏப் 24, 2025 22:47

ஆஹா தமிழக போலிசார் ஸ்காட்லாண்ட் யார்ட் போலிசாருக்கு சமமானவர்கள் என்பதை கடத்தல் நடைபெறுகிறதென புகார் அளித்தவர்மீதே வழக்கு பதிந்து நிருபித்து விட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை