மேலும் செய்திகள்
5 பேரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
26-Oct-2025
வேலுார்: வேலுார், சத்துவாச்சாரியை சேர்ந்தவர், 43 வயது நபர். ரியல் எஸ்டேட் புரோக்கர்.சில மாதங்களுக்கு முன் இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்த குறுஞ்செய்தி வந்தது. அதில், அதன் மூலம் லாபம் பெற்றவர்களின் விவரங்களையும் குறிப்பிட்டிருந்தனர். கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர். இதை உண்மை என நம்பிய அவர், மர்ம நபர்கள் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து பல தவணைகளாக, 11 லட்சத்து 49 ஆயிரத்து 620 ரூபாயை முதலீடு செய்தார். மேலும் அவர் லாபம் ஈட்டியதாக கூறி, ஸ்க்ரீன்ஷாட்களை அனுப்பி உள்ளனர். பின், அவர் தன் பணத்தை திரும்பி பெற முயன்ற போது கூடுதலாக பணம் செலுத்தினால், முதலீடு செய்த பணம் திரும்பி கிடைக்கும் என தெரிவித்தனர். அவரது புகாரின்படி, வேலுார் சைபர் கிரைம் போலீசார் விசாரிக் கின்றனர்.
26-Oct-2025