மேலும் செய்திகள்
கோதண்டராமர் உற்சவம் இன்று துவக்கம்
29-Mar-2025
பொன்னை:வேலுார் மாவட்டம், பொன்னை கோதண்டராமர் கோவிலில், கடந்த 6ம் தேதி ராம நவமி உற்சவம் துவங்கியது.இரண்டு வாரங்களாக நடந்து வந்த உற்சவத்தில், கேடய உற்சவம், கருட சேவை, சூரிய பிரபை, அனுமந்த வாகனம், சந்திர பிரபை, யாளி, அன்னம், புஷ்ப விமானம் என, தினமும் பல்வேறு வாகனங்களில், சீதா தேவி உடனுறை கோதண்டராமர் வீதியுலா எழுந்தருளினார். உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று, புஷ்ப வாகனத்தில் வீதியுலா வந்தனர்.அதேபோல், ஆர்.கே.பேட்டை அடுத்த அஸ்வரேவந்தாபுரம் கோதண்டராமர் கோவிலிலும் ராமநவமி உற்சவத்தின் நிறைவாக, நேற்று முன்தினம் இரவு சீதா தேவி உடனுறை கோதண்டராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது.இதில், அஸ்வரேவந்தாபுரம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
29-Mar-2025