உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு உடலுறுப்பு தானம்: உதயநிதி

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு உடலுறுப்பு தானம்: உதயநிதி

வேலுார்:''இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் உடலுறுப்பு தானம் அளிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.வேலுாரில், நறுவீ மருத்துமனை சார்பில் ஹெல்தி இந்தியா, ஹாப்பி இந்தியா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நோய் வருமுன்னரே கண்டறிந்து காக்கும், 'வருமுன் காப்போம்' திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'மக்களை தேடி மருத்துவம் நம்மை காப்போம், மக்களை தேடி மருத்துவம், நம்மை காப்போம் - 48' போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்துள்ளார்.மேலும், தமிழக சுகாதாரத்துறை அனைத்து துறைகளை காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது. இதை நிதி ஆயுக் பாராட்டியும் உள்ளது. இந்தியாவிலேயே, சுகாதாரத்துறையில் தமிழகம் தான் முதன்மை இடம் வகிக்கிறது. மேலும், உடலுறுப்புகள் தானமாக அளிப்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் உடல்கள் நல்லடக்கம் என அரசு அறிவித்த பின், உடலுறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், 42 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ