உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட கிரிக்கெட் அணிக்குநாளை வீரர்கள் தேர்வு முகாம்

மாவட்ட கிரிக்கெட் அணிக்குநாளை வீரர்கள் தேர்வு முகாம்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு நாளை நடக்கிறது. விழுப்புரம் அடுத்தகப்பியாம்புலியூர் சிகா மேல்நிலை பள்ளியில் 14 மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் நாளை (17ம் தேதி) நடக்கிறது.மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடக்கும் முகாமில் 14 வயதிற்கு உட்பட்டோருக்கு வயது வரம்பு கடந்த 1997ம் ஆண்டு செப்., 1ம் தேதி அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருத்தல் வேண்டும். 19 வயதிற்குட்பட்டோருக்கு வயது வரம்பு கடந்த 1992ம் ஆண்டு செப்., 1ம் தேதி அன்று அல்லது அதற்கு பின் பிறந்திருத்தல் வேண்டும். இத்தேர்வுக்கு வரும் வீரர்கள் தகுந்த வயது சான்றிதழ்களுடன் வெள்ளை நிற உடையில் வரவேண்டும்.இதில் 14 வயதிற்குட்பட்டோருக்கு காலை 9 மணிக்கும், 19 வயதிற்கு உட்பட் டோருக்கு மதியம் 2 மணிக்கும் வீரர்கள் தேர்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ