உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லூரி மாணவர்களுக்கு பண்பாட்டு கழக போட்டிகள்

கல்லூரி மாணவர்களுக்கு பண்பாட்டு கழக போட்டிகள்

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடந்தது. திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய பேச்சுப் போட்டிகள் நடந்தது. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் உதியன் தலைமை தாங்கினார். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை தமிழரசி, திருக்குறள் அறக்கட்டளை தலைவர் தங்கபழமலை, வேட்டவலம் புலவர் விஸ்வநாதன் நடுவர்களாக இருந்து வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் குறிஞ்சிநாதன், ஜெயக்குமார், விருதுராஜா, பன்னீர்செல்வம், தேசப்பிரியன் செய்திருந்தனர். இந்த போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கபிலர் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ