உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே கோட்ட மேலாளர்சின்னசேலத்தில் திடீர் ஆய்வு

ரயில்வே கோட்ட மேலாளர்சின்னசேலத்தில் திடீர் ஆய்வு

சின்னசேலம்:சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் நேற்று சின்னசேலம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.சின்னசேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளர் ராம் தலைமையில் பிரிவு மேலாளர்கள் சுப்ரமணியன், சிவதாசன் ஆய்வு செய்தனர். ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் தங்கும் அறை, கால அட்டவணை, ரயில்வே குடியிருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு, சாலை வசதி, குடிநீர் மற்றும் மின் வசதி குறித்து கேட்டறிந்தனர்.சின்னசேலம் ரோட்டரி தலைவர் சக்கரபாணி, அரிமா தலைவர் ரமேஷ், அரிசி ஆலை உரிமையாளர் குணசேகரன், வாசவி கிளப் மனோகரன், வியாபாரிகள் சங்க நிர்வாகி வெங்கடேசன் உள்ளிட்டோர் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் மங்களுரூ - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலை கூடுதலாக இயக்கவும், பெங்களுரூ - நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் சின்னசேலம் வழியாக இயக்கவும், பகல் நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை