உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வக்கீல்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

வக்கீல்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனம் கோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.சங்க தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் கோதண்டம்,சங்கரன், தேவகுமார், அசோகன், ஆதித்தன், பார்த்தசாரதி, ராமமூர்த்தி, அருணகிரி கலந்துக் கொண்டனர். திண்டிவனம் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலை வரும் 27ம் தேதி நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சங்கத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணை செயலா ளர் பதவிகளுக்கு வரும் 15ம் தேதி வரை மனு செய்யலாம். போட்டி இருந்தால் வரும் 27ம் தேதி ஓட்டுப் பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ