உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காதல் தோல்வியால் பெண் தற்கொலை

காதல் தோல்வியால் பெண் தற்கொலை

மயிலம் : மயிலம் அருகே இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.மயிலம் அடுத்த தென்கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகள் பிருந்தாவதி (20). எம்.எஸ்சி., பட்டதாரி. இதே ஊரை சேர்ந்த அசோக் குமார் பொக்லைன் டிரைவராக வெளியூரில் வேலை செய்து வருகிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிருந்தாவதி கேட்டதற்கு அசோக்குமார் மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த பிருந்தாவதி கடந்த 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு அசோக்குமார் வீட்டு வாசலுக்குச் சென்று தீ வைத்துக் கொண்டார். பலத்த காயத்துடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2 மணிக்கு இறந்தார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்