உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருக்கோவிலூர் பேரூராட்சி நிர்வாகம் செயலிழந்துள்ளது

திருக்கோவிலூர் பேரூராட்சி நிர்வாகம் செயலிழந்துள்ளது

திருக்கோவிலூர் : திருக்கோவிலூரில் பேரூராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வெங்கடேசன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.முகையூர் ஒன்றிய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள எம்.எல். ஏ., அலுவலகம் திருக்கோவிலூர் தொகுதிக்கான எம்.எல்.ஏ., அலுவலகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைத்தார். அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோதண்டராமன் முன்னிலை வகித்தார். தே.மு. தி.க., நிர்வாகிகள் முருகதாஸ், எடையூர்பழனி, கோவிந்தன், ராமச்சந்திரன், கிரிதரன், ராயல் பாலாஜி, மும்மூர்த்தி, ரமேஷ்பாபு, கவுன்சிலர்கள் வெங்கட், சரவணன், கோகுலகிருஷ்ணன் மற்றும் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அலுவலகத்தை திறந்து வைத்து வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசியதாவது :தொகுதி அலுவலகத்திற்கு வரும் மனுக்கள் அனைத்தும் கவனமாக ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதேபோல் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அதிகாரிகள் உதாசீனபடுத்தாமல் ஆலோசனையாக எடுத்துக் கொண்டு நிவர்த்தி செய்ய வேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறு இந்த ஆட்சியிலும் தொடர்கிறது என்ற பேச்சு வந்து விடாமல் கவனமுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும். நானும் பொறுப்பை உணர்ந்து செயலாற்றுவேன்.திருக்கோவிலூரில் பேரூராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவிற்கு மோசமாக செயல்பாடு உள்ளது. அதிகாரிகள் மனசாட்சிப்படி நடந்து கொண்டு வளர்ச்சி பணிகள் தரமானதாக இருக்கிறதா என அவ்வப்போது ஆய்வு செய்ய வேண் டும். திருக்கோவிலூரில் மின்பற்றாக்குறை அதிகமாக உள்ளது. கோதண்டபாணிபுரத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும்.அ.தி.மு.க., ஆட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியாக இருக்கும். இதற்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி