உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது

செஞ்சி : செஞ்சி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். செஞ்சி தாலுகா ஜம்போதியை சேர்ந்தவர் குமார் (30). இவர் வீட்டு மூன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த 8ம் தேதி காணாமல் போனது. இதே போல் திண்டிவனம் தாலுகா தீவனூரை சேர்ந்த ஆனந்தன் (27) என்பவர் கடந்த 9ம் தேதி செஞ்சி கோட்டை அருகே நிறுத்திய மோட்டார் சைக்கிளும் காணாமல் போனது. இதையடுத்து செஞ்சி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது செஞ்சியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த புதுச்சேரி வீராம்பட்டினத்தை சேர்ந்த ராஜ்கிரன் (19), பூமியான்பேட்டையை சேர்ந்த துரை (29), திருவண்ணாமலை மாவட்டம் கண்ணூரை சேர்ந்த கோபி (28) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ