உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் உரிமையாளரிடம் ரூ.85 ஆயிரம் பறிப்பு

கார் உரிமையாளரிடம் ரூ.85 ஆயிரம் பறிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(27). இவர் நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நோக்கி காரில் வந்தார். அதனூர் அருகே பின்னால் வந்த பைக் காரின் பின் புறம் மோதியது. இதில் பைக்கில் வந்த பாலமுருகன்(32) காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் உறவினர் சரவணபவன் உட்பட சிலர் ரவிவர்மனை தாக்கி கார் கண்ணாடியை உடைத்து அவரிடமிருந்த 85 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர்.காணை சப்-இன்ஸ்பெக்டர் அரிராகவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிவர்மனை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி