உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராணுவ வீரரிடம் ரூ.1.90 லட்சம் மோசடி

ராணுவ வீரரிடம் ரூ.1.90 லட்சம் மோசடி

விழுப்புரம்: ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக ஏமாற்றி, ராணுவ வீரரிடம் ஆன்லைனில் ரூ.1.90 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தனர்.விழுப்புரம் அடுத்த அரகண்டநல்லுார் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி,26; ராணுவ வீரர். கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்த இவரது மொபைல்போனுக்கு , டெலி லிங்க் வழியாக, ஷேர் மார்க்கெட்டில் ரூ.2000 முதலீடு செய்தால், 45 நிமிடத்திற்குள் ரூ.8,000 ஆயிரம் கிடைக்கும் என, ஒரு விளம்பர தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய முத்துப்பாண்டி, அதில் தொடர்புகொண்டு, அந்த மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கில் 16 தவணைகளாக ரூ.1.90 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் மர்ம நபர்கள் கூறியதுபோல் கூடுதல் பணம் வழங்காமல் ஏமாற்றியுள்ளனர். முத்துபாண்டி புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ