உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 13 ஆண்டுகளாக 100 சதவீதம் கென்னடி மெட்ரிக் பள்ளி சாதனை

13 ஆண்டுகளாக 100 சதவீதம் கென்னடி மெட்ரிக் பள்ளி சாதனை

திண்டிவனம் : ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.திண்டிவனம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 104 மாணவ, மாணவியர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தொடர்ந்து 13 ஆண்டுகளாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்தாண்டு மாணவி கோபிகா, 600க்கு 572 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஸ்வேதா 565, பாத்திமா 562, மாணவர் சஞ்சய் 552, வருண்குமார் 550 மதிப்பெண் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் 500க்கு மேல் 33 மாணவர்களும், 550க்கு மேல் 5 மாணவர்களும், 450க்கு மேல் 27 மாணவர்கள் எடுத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களை தாளாளர் சண்முகம், இயக்குனர் வனஜா சண்முகம், செயலாளர் சந்தோஷ், ஆசிரியர்கள் பாராட்டினர்.பள்ளி தாளாளர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் எமது பள்ளி சாதனை படைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பாடுப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு அளித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பான இடம் பிடித்த மாணவர்களையும் பாராட்டுகிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ