உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீராம் பள்ளியில் 10ம் ஆண்டு விழா

ஸ்ரீராம் பள்ளியில் 10ம் ஆண்டு விழா

திண்டிவனம் : திண்டிவனம் - புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள ஓமந்துார் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ., பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் முரளி ரகுராமன் தலைமை தாங்கினார். விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் நேபால் நாட்டைச் சேர்ந்த சரஸ்வதி வேத வித்ய அமைப்பைச் சேர்ந்த மகந்த்மான்கிரி பரிசு வழங்கி பாராட்டினார்.விழாவில், மத்திய அரசின் கல்வித் துறையின் கல்வி ஆலோசகர் ஸ்ரீகாந்த் கணேஷ், சென்னை இ.எல்.ஏ., கிரீன் பள்ளி நிறுவனர் சம்ஹித்தா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், தென்கோடிப்பாக்கம் ஊராட்சி தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ