| ADDED : மே 03, 2024 05:38 AM
விழுப்புரம் : காரில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்திய புதுச்சேரி மாநில ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், நேற்று சிறுவந்தாடு கிராமத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த செவ்ராலெட் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 2 மூட்டைகளில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.காரில் வந்த இருவரிடமும் விசாரணை நடத்தியதில், புதுச்சேரி மாநிலம், மடுகரையைச் சேர்ந்த ஷாகுல்அமீது, 61; கலியபெருமாள் மகன் ஆதிநாராயணன், 21; டிரைவர் என்பதும்; இவர்கள், தமிழகத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்கு செய்வதற்காக குட்கா பொருட்களை கடத்திச் சென்றதும், மேலும் ஷாகுல் அமீது வீட்டில் 43 மூட்டை குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.அதன் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் 45 மூட்டைகளில் இருந்த 4.50 லட்சம் மதிப்புள்ள 351 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.