உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆந்திராவிற்கு ஆட்டோவில் கடத்திய 216 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது

ஆந்திராவிற்கு ஆட்டோவில் கடத்திய 216 மதுபாட்டில்கள் பறிமுதல்; இருவர் கைது

வானுார் : புதுச்சேரியில் இருந்து தமிழகம் வழியாக இரு ஆட்டோவில் கடத்தப்பட்ட 216 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, இரு ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்தனர்.கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை, கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி பைபாஸ் சாலை வழியாக வந்த இரு ஆட்டோக்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, பயணிகள் அமரும் சீட்டிற்கு அடியில் பலகையில் ஓட்டை போட்டு, அதற்குள் மதுபாட்டில்கள் வைத்து, கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டி வந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், ஆந்திர மாநிலம் அந்தமயா மாவட்டம் தர்மாபுரத்தை சேர்ந்த தாசா வினோத், 32; அதே பகுதியை சேர்ந்த வெங்கடரமணா, 39; என்பதும், இருவரும் இரு ஆட்டோக்களில், 216 குவாட்டர் பாட்டில்களும், 10 லிட்டர் சாராயத்தை கடத்தி சென்றதும், ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடப்பதால், அப்பகுதிக்கு கடத்திச்சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ ஆட்டுநர்கள் இருவரையும் கிளியனூர் போலீசார் கைது செய்து, 216 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு ஆட்டோவையும் பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை