மேலும் செய்திகள்
நாளை மின்தடை
8 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
8 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
8 hour(s) ago
மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
8 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் பஸ்சில் திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி ஷீலா, 48; திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று காலை கண்டமங்கலத்தில் இருந்து, அலுவலகம் செல்ல தனியார் பஸ்சில் விழுப்புரம் வந்தார். விழுப்புரம் அருகே அவரது கை பையிலிருந்து, அருகே நின்றிருந்த 3 பெண்கள், 2,000 ரூபாயை திருடியுள்ளனர்.இதனை பார்த்த ஷீலா, உடனே சத்தம் போட்டு, பயணிகள் உதவியுடன், 3 பெண்களையும் பிடித்து, விழுப்புரம் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.விசாரணையில், அவர்கள், திருவண்ணாமலை சாந்தி நகரைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி அனிதா, 28; ராமு மனைவி மகேஸ்வரி, 23; ராஜா மனைவி ராதிகா, 43; என்பதும், விழுப்புரம் பகுதியில், பஸ் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago