உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூறைக்காற்றால் கரும்பு வயலில் தீ விபத்து 4 டிராக்டர் டெய்லர், 8 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்

சூறைக்காற்றால் கரும்பு வயலில் தீ விபத்து 4 டிராக்டர் டெய்லர், 8 ஏக்கர் கரும்பு எரிந்து சேதம்

கண்டமங்கலம்: கண்டமங்கலத்தில் வீசிய சூறைக்காற்றில் மின்கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்பு லோடு ஏற்றிய 4 டிராக்டர் டெய்லர்கள் மற்றும் 8 ஏக்கர் கரும்பு எரிந்து நாசமானது.விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த ஆழியூர் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள் அறுவடை செய்யும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் வெட்டிய கரும்புகளை 4 டிராக்டர் டெய்லரில் ஏற்றி ஆலைக்கு அனுப்ப தயாராகினர்.இந்நிலையில், காலை 11:30 மணிக்கு அப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில், அருகில் உள்ள லட்சுமி நாராயணன் என்பவருக்கு சொந்தமான அறுவடை செய்யப்பட்ட கரும்பு வயலில் சென்ற மின் தொடரில் கம்பிகள் உரசியதில் தீப்பொறி கொட்டியது. அதில், வயலில் காய்ந்து கிடந்த கரும்பு சோலைகள் தீப்பற்றி மளமளவென வேகமாக தீ பரவியது.புகைமூட்டத்தாலும், அனல் காற்று வீசியதாலும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள் மற்றும் டிராக்டர் டிரைவர்கள் டெய்லரை நிலத்தில் விட்டுவிட்டு, டிராக்டர் இன்ஜினுடன், தப்பித்தோம், பிழைத்தோம் என தப்பினர்.காலை 11:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, 20 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில் இருந்த கரும்பு சோலைகள் மற்றும் வெங்கடேசன், ராமு, கோபாலகிருஷ்ணன், அரி உள்ளிட்ட விவசாயிகளின் 8 ஏக்கர் வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் எரிந்து நாசமானது.வெங்கடேசன் வயலில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை ஏற்றிய நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்,40; பண்ருட்டி ஸ்ரீதர்,42; ஆகியோருக்கு சொந்தமான தலா 2 டிராக்டர் டெய்லர்கள் தீயில் எரிந்து நாசமானது. விழுப்புரத்தில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி, டிராக்டர் டெய்லரில் பற்றிய தீயை அணைத்தனர். அதற்குள் டேங்கரில் இருந்த தண்ணீர் தீர்ந்தது. மின்சாரம் தடைபட்டிருந்ததால், அருகில் உள்ள விவசாய மோட்டார்களில் இருந்து தீயணைப்பு டேங்கர் லாரியில் நீரை நிரப்ப முடியவில்லை. இதனால் மாலை 4.30 மணிக்கு மேலும் கரும்பு வயல்கள் எரிந்து கொண்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ