உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் 5 பேர் காயம்: இரண்டு பேர் கைது

கோவில் திருவிழா நடத்துவதில் மோதல் 5 பேர் காயம்: இரண்டு பேர் கைது

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் இரு கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர். இதில் 5 பேர் காயடைந்தனர். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்குப் பதிந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர் .விக்கிரவாண்டி அடுத்த செய்யாத்து விண்ணான் பாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக அதே ஊரைச்சேர்ந்த சிவராமன்,34; சின்னமணி,39; ஆகிய இரு தரப்பினருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சிவராமன் வீட்டிற்கு சென்ற சின்னமணி தரப்பினர் தாங்கள் 13 ம் தேதி அன்று திருவிழா நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதற்கு சிவராமன் எங்கள் தரப்பு திருவிழா முடிந்த பிறகு செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த சின்னமணி தரப்பினர் சிவராமனை தாக்கினர். பதிலுக்கு சிவராமன் தரப்பினர் திரண்டு சின்னமணி தரப்பை தாக்கினர்.இதில் சிவராமன், மதியழகன்,56; பன்னீர் செல்வம்,65; நாகப்பன்,62; சின்னமணி ஆகியோர் காயமைடைந்தனர். காயமடைந்தவர்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.இருதரப்பினரும் கொடுத்த தனித்தனி புகாரின் பேரில் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் காத்த முத்து மற்றும் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்குப்பதிந்து வேலு,33; துரை ராஜ்,39; இருவரை கைது செய்தனர்.விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் நடத்தை விதி அமலில் இருப்பதால் தேர்தல் முடிந்த பிறகு திருவிழா நடத்திக் கொள்ள போலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி