உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.ம.மு.க.,வினர் 50 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

அ.ம.மு.க.,வினர் 50 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

விழுப்புரம், : திண்டிவனத்தில் அ.ம.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் தலைமையில் 50 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.மரக்காணம் அ.ம.மு.க., முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலு தலைமையில், அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 50 பேர், நேற்று அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் இணைந்தனர்.திண்டிவனத்தில் நடந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மரக்காணம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ