உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் கொட்டியது மழை 6,000 நெல் மூட்டைகள் சேதம்

செஞ்சியில் கொட்டியது மழை 6,000 நெல் மூட்டைகள் சேதம்

செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் போதிய இடவசதி இல்லாமல், திறந்த வெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைத்து, ஏலம் விடப்பட்டு வருகிறது.நேற்று அதிகாலை, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 7,000 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.இந்த மூட்டைகளை கிடங்குகளில் வைத்து ஏலம் நடத்த இடமின்றி 4,000 மூட்டைகளை திறந்தவெளியில் வைத்திருந்தனர். அதே இடத்தில் வியாபாரிகள் கடந்த வாரம் வாங்கிய 2,000 நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கிய கோடை மழை, ஒரு மணி நேரம் நீடித்தது. இதில், 6,000 நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் பாதிப்படைந்தனர்.இதைத் தவிர்க்க மார்க்கெட் கமிட்டியை விரிவுபடுத்தவும், திறந்த வெளி களத்தில் கூரை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை