உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காதல் திருமணம் செய்த 17 வயது மாணவி; 6 நாளில் கிணற்றில் சடலமாக மீட்பு வாலிபர் போக்சோவில் கைது

காதல் திருமணம் செய்த 17 வயது மாணவி; 6 நாளில் கிணற்றில் சடலமாக மீட்பு வாலிபர் போக்சோவில் கைது

திண்டிவனம்,: காதல் திருமணம் செய்த ஆறு நாட்களில், 17 வயது கல்லுாரி மாணவி கிணற்றில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக, சிறுமியை திருமணம் செய்த கல்லுாரி மாணவரை போக்சோவில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை 17 வயது மாணவி, மயிலம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி வீட்டிலிருந்து சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் அஜித்குமார், 19; என்பவர், மாணவியின் தந்தைக்கு போன் செய்து, அவரது மகளை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நேற்று காலை 5:30 மணியளவில், மாணவி சிறுநாங்கூரில் உள்ள கிணற்றில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்தனர். சிறுமியை திருமணம் செய்த அஜித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அஜித்குமார், திண்டிவனம் அரசு கல்லுாரியில் வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natchimuthu Chithiraisamy
செப் 11, 2024 09:49

இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கை முழுவதும் சுகமானது அல்ல என்று.


RAMAKRISHNAN NATESAN
செப் 11, 2024 02:36

Devils .....


புதிய வீடியோ