உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அவலுார்பேட்டையில் ஆலமரம் சாய்ந்தது

அவலுார்பேட்டையில் ஆலமரம் சாய்ந்தது

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பலத்த காற்று வீசியதில் ஆலமரம் வேருடன் சாய்ந்தது.அவலுார்பேட்டை பெரிய குளக்கரை பகுதியில் புதன் கிழமை தோறும் வாரசந்தை நடைபெறும். இப்பகுதியில் இருந்த ஆலமரம் நேற்று முன்தினம் இரவு வீசிய காற்றில் வேரோடு சாய்ந்தது. சில தினங்களுக்கு முன் இதே பகுதியில் பெரிய மரம் வேரோடு சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.மேலும், இங்குள்ள மரங்களின் வேர் பகுதியில் மண் அணைத்தும் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஊராட்சி நிர்வாகம், மரம் நடுவோர் சங்கத்தினர் இணைந்து மேற்கொண்டால் மரங்களை பாதுகாக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்