உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையில் எரிந்த பைக் விழுப்புரத்தில் பரபரப்பு

சாலையில் எரிந்த பைக் விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையில் ஓட்டிச் சென்ற பைக் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், முகமதியார்பேட்டையைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன்,32; இவர், நேற்று காலை 9:30 மணியளவில், வீட்டிலிருந்து விழுப்புரம் கடை வீதிக்கு தனது மகனுடன் பஜாஜ் பைக்கில் புறப்பட்டார்.கீழ்பெரும்பாக்கம் கடை வீதி வழியாக சென்றபோது, பைக் பேட்டரி திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. உடன் இருவரும் பைக்கில் இருந்து கீழே இறங்கினர்.விழுப்புரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். முதல்கட்ட விசாரணையில், பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி