உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாரியில் மணல் கடத்தல் டிரைவர் மீது வழக்கு

லாரியில் மணல் கடத்தல் டிரைவர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று சொர்ணாவூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு, அனுமதியின்றி சட்டவிரோதமாக டிப்பர் லாரியில், மணல் கடத்திய நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றார்.இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி, ஜே.சி.பி.,யை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி டிரைவர் பூவரசன்குப்பம் திருவேங்கடம் என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ