உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இரு தரப்பினர் மோதல் ஊராட்சி தலைவர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் ஊராட்சி தலைவர் மீது வழக்கு

விழுப்புரம்: வளவனுார் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஊராட்சி தலைவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வளவனுார் அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிவேல் மனைவி சத்தியா, 37; கடந்த 18ம் தேதி, மாரிவேல் அங்குள்ள நுாலகம் அருகே அமர்ந்திருந்த போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் செல்வம், 50; பரசுராமன், 51; ஆகியோர், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது குறித்து, தகராறு செய்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பினர் புகாரின் பேரில், செல்வம், பரசுராமன், மாரிவேல் ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ