உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த குறை கேட்பு கூட்டத்துக்கு, மனு அளிக்க வந்த, விழுப்புரம் அடுத்த கள்ளிப்பட்டு, வடவாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி சங்கரி, 35; தான், குடும்பத்துடன் இருந்த வாடகை வீட்டில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தீயணைப்பு துறையினர், போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இது குறித்த புகாரின் பேரில், கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சங்கரி மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ