| ADDED : ஜூலை 08, 2024 04:48 AM
வானுார்: ஆரோவில் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குப்பன் மகன் ஸ்ரீநாத், 30; கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மகன் திலகராஜ், 23; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 5ம் தேதி இரவு இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த திலகராஜ் கத்தியால், ஸ்ரீநாத்தை வெட்டி மிரட்டல் விடுத்தார். அதில் மூக்கில் பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இது குறித்து ஸ்ரீநாத் அளித்த புகாரின் பேரில், திலக்ராஜ் மீது ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.