உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரவடியை வெட்டி கொல்ல முயற்சி விழுப்புரத்தில் 4 பேர் மீது வழக்கு

ரவடியை வெட்டி கொல்ல முயற்சி விழுப்புரத்தில் 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம்: முன்விரோத தகராறில் பிரபல ரவுடியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற தம்பதி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.விழுப்புரம் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் கார்த்திக் (எ) லாலி கார்த்திக்,26; பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது நண்பர் சாலாமேடு வினோத்,30; தான் காதலித்து வந்த தீபா,30; என்பவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். அதனால் தீபா, சாலாமேட்டில் கடந்த 9 மாதங்களாக வசித்து வரும் புதுச்சேரி சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த முருகன் மகன் பச்சையப்பன்,35; என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இதனால் பச்சையப்பனுக்கும், வினோத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பச்சையப்பன், தீபா உள்ளிட்ட 4 பேர், வினோத் வீட்டிற்கு சென்று கதவை தட்டினர். வினோத் மனைவி சுகுணா வெளியே வந்ததும் 4 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.இதனால், ஆத்திரமடைந்த வினோத், அவரது மனைவி சுகுணா, நண்பர்கள் கார்த்திக், சாலாமேடு குள்ளன் மகன் மகேஷ், 28; ஆகியோர் நேற்று மதியம் 12:45 மணிக்கு பச்சையப்பன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அதில் படுகாயமடைந்த கார்த்திக், மகேஷ் மற்றும் சுகுணா ஆகிய மூவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து பச்சையப்பன், தீபா உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி