உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொடுத்த பணத்தை மிரட்டி கேட்டவர் மீது வழக்கு

கொடுத்த பணத்தை மிரட்டி கேட்டவர் மீது வழக்கு

மரக்காணம் : கோட்டக்குப்பம் அருகே கொடுத்த பணத்தை மிரட்டி கேட்ட நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம், சாரத்தைச் சேர்ந்த சந்தோஷ், 42; கோட்டக்குப்பம் பாரதி நகரை சேர்ந்த அப்துல்சாகீப், 34; என்பவருக்கு கடந்த ஆண்டு 4 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார்.சந்தோஷ் பலமுறை அப்துல்சாகீப்பிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். தருவதாக கூறி காலம் கடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று, சந்தோஷ் தனது ஆதரவாளர்கள் இரண்டு பேருடன் சென்று அப்துால்சாகீப்பை தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.இது குறித்து அப்துல்சாகீப் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்