உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர் மாரடைப்பால் சாவு

பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர் மாரடைப்பால் சாவு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து பலியானார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் விஜி (எ) ஆறுமுகம், 45; அரசூர் கிராமத்தில் துாய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென அதிகளவில் மழைபெய்துள்ளது. அதனால் அரசூர் கூட்ரோடு பகுதியில் மழை நீர் தேங்கி நின்றுள்ளது. இதனை நேற்று மாலை 6:00 மணியளவில் ஆறுமுகம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை அருகிலுள்ள இருவேலபட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி