உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பா.ம.க.,வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநிலச் செயலாளர் செம்மனேரி பாலாஜி தலைமை தாங்கினார். விழுப்புரம் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து நடந்த கூட்டத்தில் பா.ஜ., மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் முத்து, பா.ம.க., லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ஜெயராமன், ஐ.ஜே.கே., ஸ்ரீதர், த.மா.கா., அப்துல்லா, ஓ.பி.எஸ்., அணி ராஜசேகர் ,சசிகலா அணி தேவராஜ் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் பா.ஜ., முருகன், பாலசுப்ரமணியன், ஐ.ஜே.கே., ரூபாகரன், செந்தாமரைக் கண்ணன், ராஜா, வெங்கடேஸ்வரி, வசந்தி, பா.ம.க., விஜி, வெங்கடேசன், சந்துரு, ஜீவா ஜெயச்சந்திரன், மணிகண்டன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக தொகுதி முழுதும் மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ