உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்

மனநலம் பாதிக்கப்பட்டவர் மாயம்

வானூர்: வீட்டில் இருந்து காணாமல் போன மன நலம் பாதிக்கப்பட்டவரை கண்டு பிடித்து தரக்கோரி, அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார்.வானூர் அடுத்த பூத்துறை கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகன் அன்பழகன், 64; மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 25 ஆண்டுகளாக அதே பகுதியில் செயல்பட்டு வரும் மனநலம் காப்பகத்தில் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.தினந்தோறும் அவர் வீட்டில் இருந்து மனநலக்காப்பகத்திற்கு சென்று பொழுதை கழித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து மன நலக்காப்பகத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன அன்பழகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை