உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி 

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி 

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலத்த அடிபட்டு இறந்தார். திண்டிவனம் அருகே உள்ள எண்டியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ஆனந்த், 35; இவர் ஹிட்டாச்சி ஆப்ரேட்டர். சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். ஆனந்த் நேற்று அதிகாலை திண்டிவனத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலை 3.20 மணியளவில், சாரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது, பின்னால் சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட ஆனந்த் சம்பவ இடத்திலேயே பலத்த அடிபட்டு இறந்தார். விபத்து தொடர்பாக ஒலக்கூர் போலீசார் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ