உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் டிரான்ஸ்பார்மர் தீ பிடித்ததால் பரபரப்பு 

செஞ்சியில் டிரான்ஸ்பார்மர் தீ பிடித்ததால் பரபரப்பு 

செஞ்சி : செஞ்சியில் காந்தி பஜாரில் டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.செஞ்சி காந்தி பஜாரில் துணிக்கடை ஒன்றின் முன்பு இருக்கும் டிரான்ஸ் பார்மரில் நேற்று பிற்பகல் 2:30 மணியளவில் ஏற்பட்ட ஓட்டையால் அதில் இருந்து ஆயில் வெளியேறி கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது.தகவல் அறிந்து மின்வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.அதன் பிறகு டிரான்ஸ்பார்மரை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்து 30 நிமிடத்தில் மீண்டும் மின்சாரம் வழங்கினர். மக்கள் நடமாட்டம் அதிகமான் இடத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி