உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேகத்தடைகளை எச்சரிக்கும்  வெள்ளை கோடு பணி ஜரூர்

வேகத்தடைகளை எச்சரிக்கும்  வெள்ளை கோடு பணி ஜரூர்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரே சென்னை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.இது மட்டுமின்றி, பெருந்திட்ட வளாகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், அருகே நீதிமன்றம் உள்ளது.இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்களை சீரமைக்கும் பணிகளில் போலீசார் தினந் தோறும் ஈடுபட்டுள்ளனர்.பெருந்திட்ட வளாகம் அருகேவுள்ள இரு வேகத்தடைகள் சாலையில் உள்ள கருப்பு நிறத்திலே உள்ளதால், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தெரியாமல் அதில் ஏறி விபத்துக்குள்ளாகின்றனர்.இதையொட்டி, நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், வேகத்தடைகள் தெரியும் எச்சரிக்கையான வெள்ளை கோடுகளை அதில் அடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ